மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரை விமர்சனம் ரேட்டிங் 3.5/5

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரை விமர்சனம் ரேட்டிங் 3.5/5

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி

நடிப்பு: ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசி லயா, முனிஷ் காந்த், ராம்ஸ், ஆதித்யா   தயாரிப்பு: வி சுகந்தி அண்ணாதுரை இசை: ஸ்ரீகாந்த் தேவா  ஒளிப்பதிவு: அசோக் ராஜ்

இயக்கம்: ஏ எஸ் முகுந்தன்   பிஆர்ஓ: சதீஷ் S2 மீடியா

கதை ஓபன் பண்ணா…!

வட சென்னையில் பெரிய மாஃபியாவாக இருக்கும் ஆனந்தராஜுக்கு சென்னையின் பல இடங்களில் கிளைகள். எல்லாருமே அந்தந்த ஏரியாவுக்கு அவரால் நியமிக்கப்பட்ட ரவுடிகள். அதே நேரம் எந்த கிளை நிறுவனமும் தலைமை அனுமதி இல்லாமல் எதையும் செய்ய முடியாது. தலைமை உத்தரவிட்டால் யோசிக்காமல் உடனே செய்து முடித்து விட வேண்டும். இப்படியாக அடிதடியில் தொடங்கி கொலை வரை குற்ற செயல்கள் தடையின்றி நடந்து வருகின்றன. நகரில் எத்தனை குற்ற செயல்கள் நடந்தாலும் போலீசில் ஒரு எஃப் ஐ ஆர் கூட பதிவாகாது. இதுதான் போலீசுக்கு தலைவலியாக இருக்கிறது. ஆனால் பூங்காவனத்தை நேரம் பார்த்து தீர்த்துக்கட்ட அவரது கூட்டத்தில் உள்ளவர்களே திட்டமிடுகிறார்கள். பல கொலை சம்பவங்களை நிகழ்த்திய பிறகும் பூங்காவனம் மீது போலீசில் ஒரு எப் ஐ ஆர் கூட இல்லை என்பதால் அவரை கைது செய்ய முடியாத போலீஸ் துறை,  இன்ஸ்பெக்டர் திகழ் பாரதி (சம்யுக்தா) தலைமையில் தனிப்படை அமைத்து பூங்காவனத்தை என்கவுண்டர் செய்ய முடிவு செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஆனந்தராஜ் மகள் ஒருவனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்து கொண்டு அவனை மிரட்டி தாக்கியதில் அவன் இறந்தே போகிறான். ஆனாலும் இளைஞரின் பெற்றோர் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதற்கிடையே ஆனந்தராஜூக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுகிறது சம்யுக்தா தலைமையிலான போலீஸ் குழு. இதே சமயத்தில் தொழில் போட்டியில் உடன் இருப்பவர்களும் அவரைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு பக்கங்களில் போடப்படும் திட்டங்களில் இருந்து அவர் தப்பித்தாரா? தனது ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’யைத் தொடர்ந்து நடத்தினாரா என்பது தான் இந்தப் படத்தின் மீதிக் கதை…!

மதராஸ் மாபியா கம்பெனி  பட ஹீரோவே ஆனந்தராஜ்தான் அவரை சுற்றித்தான் முழு கதையும் பின்னப்பட்டிருக்கிறது. வில்லத்தனத்துக்கு வில்லத்தனம் , அதே சமயம் தன்னை என்கவுண்டர் செய்ய வரும் சம்யுக்தாவிட மிருந்து தப்பிப்பதற்காக அவர் செய்யும் ஹீரோயிசம் இரண்டுமே ரசிக்கும்படி உள்ளது…!ஆனந்தராஜின் மனைவியாக நடித்திருக்கும் தீபா, கணவனை மட்டம் தட்டும் காட்சிகளில் கலகலக்க வைக்கிறார்…..சக்களத்தி சண்டையில் சிரிக்கவும் வைக்கிறார்….!கொண்டி தோப்பு வரதன் கதாபாத்திரத்தில்  டம்மி ரவுடியாக முனிஷ்காந்த் சிரிக்க வைக்கிறார்.

இயக்குனர் ஏ எஸ் முகுந்தன் ரவுடியிச கதையாக இருந்தாலும் ஒரு தாதா குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை காமெடியுடன் தந்திருக்கிறார்.ஆனந்தராஜ் பூங்காவனம் என்கிற பாத்திரத்தில் அதகளம் செய்துள்ளார் படத்தோட ஹீரோவே ஆனந்தராஜ் அவருக்காகவே இந்த கதை திரைக்கதையை செதுக்கியுள்ளார் இயக்குனர்

மொத்தத்தில்  மெட்ராஸ் மாபியா கம்பெனி – நகைச்சுவை விருந்து

நம்ம tamilprimenews .Com ரேட்டிங் 3.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *