கும்கி 2 திரைவிமர்சனம் ரேட்டிங் 3.2/5

கும்கி 2 திரைவிமர்சனம் ரேட்டிங் 3.2/5

கும்கி 2

நடிப்பு: மதி, அர்ஜுன் தாஸ், ஷிரிட்டா ராவ் , ஹரிஷ் பாரேடி, ஸ்ரீநாத், நடக்கள் உன்னிகிருஷ்ணன், திருச்செல்வம், கொட்டச்சி, சூசன் ஜார்ஜ்,

தயாரிப்பு: துவால் காடா  இசை: நிவாஸ் கே பிரசன்னா   ஒளிப்பதிவு,: சுகுமார்   இயக்கம்: பிரபு சாலமன்     பிஆர்ஓ: யுவராஜ்

கதை ஓபன் பண்ணா….!

மலைப்பகுதியில் வாழும் மதிக்கு தந்தை இல்லை. தாய் இன்னொருவருடன் வாழ்கிறாள். அவர்கள் ‘குடி’யும் கும்மாளமுமாக பெரும்பாலும் மதி மயங்கிய நிலையிலேயே இருக்க, இவர்களால் சிறுவன் மதி பாதிக்கப்படுகிறான்…பள்ளியிலும் அவனுக்கென்று நண்பர்கள் யாரும் இல்லாமல் தாழ்வுணர்ச்சியில் இருக்கிறான். இந்நிலையில் பள்ளி ஆசிரியர் அவனை அரவணைக்கிறார். அன்பு காட்டுகிறார். மனிதன் நேசிக்கா விட்டால் என்ன… இயற்கையை நேசி. அது உன்னை நேசிக்கும் என்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தில் பக்கத்துக் காட்டில் ஒரு யானைக் குட்டி பள்ளத்தில் தவறி விழுந்து விட, அதை பள்ளத்திலிருந்து மீட்கிறான். அது முதல் மதியும் யானைக் குட்டியும் இணை பிரியாத நண்பர்கள் ஆகிறார்கள். இதனை அறிந்து கொண்ட அவனது தாய் அந்த யானையை பெரிய விலைக்கு விற்க ஏற்பாடு செய்கிறாள். மதிக்குத் தெரியாமல் ஒரு நாள் விற்றும் விடுகிறாள். இது தெரியாமல் மதி யானையைத் தேடி  அலைகிறான்.பலனில்லை. யானை அவன் கண்ணில் படவே இல்லை.

ஒரு நாள் அவனைப் பார்த்த ஆரம்ப பள்ளி ஆசிரியர் அவனிடம், நாம் உண்மையாய் நேசிக்கும் போது அந்த நேசம் ஒரு நாள் நம்மை தேடி வரும். எனவே முதலில் கல்லூரி படிப்பை முடி என்று ஆலோசனை தருகிறார். அவர் சொன்னபடி கல்லூரி படிப்பை முடித்த கையோடு யானையை தேட பயணப்படுகிறான். அப்போது யானை இருக்கும் இடம் அவனுக்கு தெரிய வருகிறது. ..!அதே நேரம் ஆட்சியை கைப்பற்ற சர்வ லட்சணமும் பொருந்திய ஒரு யானையை பலி கொடுக்க வேண்டும் என்று சோதிடர்கள் சொல்ல…அவர்கள் சொன்ன எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இந்த யானை அரசியல்வாதிகளுக்கு கிடைத்த நேரத்தில்தான் மதியின் பார்வையில் படுகிறது. அந்த யானையை பலி கொடுக்க ஒருகோடி ரூபாய்க்கு தரகர் அர்ஜூன் தாஸ் மூலம் அரசியல்வாதிக்கு விற்றுவிடுகிறார். அந்த யானையை யாருக்கும் தெரியாமல் மதி கடத்திவந்துவிடுகிறார். அந்த யானையை காவல்த்துறை ஆய்வாளர் ஹரிஷ் பெரடியும் தரகர் அர்ஜூன் தாஸ்சும் தேடி வருகிறார்கள். அவர்களின் கையில் யானை சிக்கியதா? இல்லையா? அரசியல்வாதி யானையை பலி கொடுத்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. ஆனாலும் அரசியல்வாதிகளின் கைக்கூலியான வன இலாகா அதிகாரி மதியை ஏமாற்றி யானையை அதை பலியிடும் இடத்தில் கொண்டு சேர்க்கிறார்.யானை பலி யிடப்பட்டதா… மதியால் யானையை காப்பாற்ற முடிந்ததா என்பது பரபர கிளைமாக்ஸ்.

காடு மலை,அருவி என ஆரம்பக் காட்சியிலேயே நம்மை அந்த இயற்கை சூழலு க்குள் நம்மை  அழைத்து சென்று விடுகிறார், ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார். நாயகனாக அறிமுக நாயகன் மதி நடித்திருக்கிறார்.வெளி உலகத்தை அதிகம் நேசிக்கும் அவர், யானைக்கு ஒரு ஆபத்து என்றதும் தவிக்கிறார். அதைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் போக தயாராக இருக்கிறார். இப் படியான பாத்திரத்தில் அறிமுக நாயகன் என்ற சுவடே இல்லாமல் மதி வாழ்ந்திருக்கிறார் .படத்தில் ஜூனியர் மதியாக நடித்துள்ள அந்தச் சிறுவனும் துறுதுறுப்பான நடிப்பில் கவர்கிறான்.மதியின் பள்ளி ஆசிரியராக வந்து ஆற்றுப்படுத்தும் பாத்திரத்தில் கோலங்கள் தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் திருச்செல்வம் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். மதியின் தாயாக எதிர்மறை சாயல் கொண்ட பாத்திரத்தில் சூசன் நடித்திருக்கிறார். ‘மைனா’வில் வில்லத்தனம் காட்டிய அதே சூசன் தான். இதிலும் அதே வில்லத்தனம்.யானையை தேடிப் பிடிக்கும் போலீஸ் படையின் தலைவராக ஹரிஷ் பெராடி வருகிறார்.அந்த எதிர்மறை பார்த்திரத்தில் பளிச்சிடுகிறார். வனத்துறை அதிகாரியாக வந்து நாயகனை திசை திருப்பும் கேரக்டரில் அர்ஜுன் தாஸ் அசத்துகிறார்.

கும்கி 2 படத்தை இயக்கிய பிரபு சாலமன் இந்த படத்தில் மதி யானையை கடத்தி ஊருக்குள் வரும்போது  மதியை தாக்க வரும் போலீசை யானை அடித்து துவம்சம்  செய்வதை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் அதேபோல யானை செய்யும் சேட்டுகள் ஹீரோவை  காப்பாற்ற யானை செய்யும் முயற்சிகள்  இவை ரசிகர்களை குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவரும் …கும்கி முதல் படத்தில் காதலைச் சொன்ன இயக்குனர் …கும்கி 2 படத்தில் மிருகமாக இருந்தாலும் அதன் மீது கொண்ட பாசத்தை ஹீரோ மதி மூலமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் சூசன்  மைனாவில் காட்டிய வில்லத்தனத்தை இந்தப் படத்திலும் அற்புதமாக நடித்துள்ளார் அவருக்கு தனி பாராட்டுக்கள்…!

இசை பாடல்கள் ஓரளவு பரவாயில்லை கதாநாயகி சீட்டாராவுக்கு அவ்வளவு வேலை இல்லை யானை மீது காட்டுக்குள் சவாரி அதை காட்சிப்படுத்தியிருந்த சுகுமாருக்கு எவ்வளவு சவால் . ஒளிப்பதிவு சுகுமார் காடுமலை இயற்கை அருவி கூடவே பிரபு சாலமன் கேட்கவா வேண்டும் பிரமிக்க வைத்து விட்டார்…!

மொத்தத்தில் கும்கி 2 குடும்பத்தோடு குழந்தைகளோடு சென்று ரசிக்கலாம்

நம்ம tamilprimenews com ரேட்டிங் 3.2/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *