தாவூத் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.1/5

தாவூத் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.1/5

தாவூத்

நடிப்பு: லிங்கா, சாரா ஆச்சர், திலீபன்,  ராதாரவி, சாய் தீனா,   ஸாரா, வையாபுரி   சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக்,ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன்

தயாரிப்பு: எஸ் உமா மகேஷ்வரி  இசை: ராக்கேஷ் அம்பிகாபதி  ஒளிப்பதிவு: சரத் வளையாபதி மற்றும் பிரேண்டன் சுஷாந்த்  இயக்கம்: பிரசாந்த் ராமன்  பி ஆர் ஓ: புவன்

தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்த தாவூத்,  போதைப்பொருள் கடத்தலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிலும் தனது போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துகிறார்.  தமிழ்நாட்டில் இருந்து கடத்த இருக்கும் அவரது போதைப் பொருளை கைப்பற்றும் முயற்சியில் அர்ஜெய் தலைமையிலான காவல்துறை ஈடுபடுகிறது.
அதே சமயம், தாவூத்தின் கடத்தல் பணிகளை 20 வருடங்களாக செய்து வந்த தீனாவும் அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறார். தாவூத்தின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கும் மற்றொரு தரப்பும் காவல்துறை உதவி ஆணையர் ஒருவரை கைக்குள் போட்டுக் கொண்டு அந்த சரக்கை கைப்பற்ற திட்டம் போடுகிறது.
இந்த நிலையில், தாவுத்தின் சரக்கை சரியான இடத்தில் சேர்க்கும் பொறுப்பில் இருக்கும் அபிஷேக், வழக்கமான ஆட்கள் மூலம் செய்தால் இந்த தொழிலில் கரை கண்ட எதிரிகள் ஆட்டையை போட்டு விடுவார்கள் என்பதால், இந்த தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத வாடகை கார் ஓட்டுநரான லிங்காவை தேர்வு செய்கிறார். பணத் தேவைக்காக கடத்தல் பணியில் ஈடுபடும் அப்பாவி லிங்கா, திட்டமிட்டபடி தாவூத் சரக்கை உரிய இடத்தில் சேர்த்தாரா ?, நிழல் உலகத்தில் வாழும் தாவூத் வெளிச்சத்திற்கு வந்தாரா ? என்பது ஸ்பென்ஸ் கிளைமாக்ஸ்.

ஹீரோ லிங்கா வாடகை கார் டிரைவராக நடித்திருக்கிறார். ரவுடி என்றாலே பயந்து நடுங்கும் லிங்கா ஒரு கட்டத்தில் அந்த ரவுடி கூடத்துக்கே கடத்தல் வேலைக்கு உதவ ஒப்புக் கொள்வது, அவர்களுக்கே தண்ணி காட்டுவது என கில்லாடித்தனமான வீழ செய்து. திடீர் திருப்பத்தை தனது காட்சிகளுக்கு சர்ப்ரைஸ் தருகிறார்.

இதுவரை இருந்த மரபை உடைத்திருக்கிறார் நாயகி என்றால் நாயகனுக்கு ஜோடியாகத் தானே இருப்பார்.  .கதாநாயகியாக நடித்திருக்கும் சாரா ஆச்சர், வில்லன் ஜானியின் கைப்பாவையாக ஜோடியாக சுற்றி வருகிறார்.   எந்த உடை போட்டாலும் அழகு அழகு இப்படிப்பட்ட அழகி ஜானி க்கு ஜோடியா என்று பொறாமைப்பட வைக்கிறது.போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜெய், தாவுத்தின் அடியாளாக நடித்திருக்கும் திலீபன், சாய் தீனா, சரத்ரவி, அபிஷேக், ஸாரா, வையாபுரி, ராதாரவி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.

போலீஸ் கமிஷனராக ராதாரவி, கடத்தல் கும்பலுடன் கை கோர்க்கும் அசிஸ்டன்ட் கமிஷனர் ஜெயக்குமார் வரும் கொஞ்ச நேரத்திலும் தனது இருப்பை பதிவு செய்து விடுகிறார்கள்.   ராக்கேஷ் அம்பிகாபதியின் இசையில் பாடல்கள் கேட்கலாம். ரசிக்கலாம். ஆக்‌ஷன் திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களுடன் பின்னணி இசை பயணிக்கிறதுகண்ணுக்கு தெரியாமல் மறைந்திருந்து ரவுடி கூட்டத்தையே நடுங்க  வைக்கும் அந்த தாவூத் யார் என்ற ஆவல் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க அதிகரிக் கிறது. அந்த தாவூத் யார் என்று காட்டாமலே டைரக்டர் சஸ்பென்ஸ் வைத்திருப்பது இரண்டாம் பாகத்துக்கு லீட் கொடுத்திருக்கி றார்கள் என்று தோன்று கிறது.பாம்பே கடத்தல்மன்னன் தாவூத்தின் தகிடு தித்தங்களை இயக்குனர் பிரசாந்த் ராமன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.அவருக்கு பாராட்டுக்கள்

மொத்தத்தில் தாவூத் – KING PIN

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.1/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *