ராயல் சல்யூட் திரைவிமர்சனம் RATING 2.7/5
படம் : ராயல் சல்யூட்
ராயல் சல்யூட் இப்படதயாரிப்பு … mahizh movie makers சிவ.கணேஷ் ,
படத்தொகுப்பு rkv ஜெய், ஒளிப்பதிவு கணேஷ் முத்தையா .. இசை ஜெய் கிசான் கலை .இன்பா ஆர்ட் பிரகாஷ், பாடல்கள் ஜெய் சிவ சேகர் .,.இயக்கம் ..ஜெய்.சிவா சே
நடிப்பு : பிரதீப் , அர்ச்சனாசிங் , யுவா யுவராஜ், சுபாஷ் சிம்பு , அமரன் MGR, இன்பா ஜனனி

கதை : OPEN பண்ணா …!
இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் நடக்கும் போரில் பாகிஸ்தான் எல்லையில் இந்தியா வீரர்கள் மேஜர் பல்வீந்தர் சிங் வீரர்கள் சக்திவேல் மற்றும் அப்பாராவ் சிக்கி கொள்கிறார்கள் ..மேஜர் குண்டடி பட்டு கழுத்தில் பலத்த காயம்..அவரால் நடக்க இயலாது என்பதால் கூட உள்ள வீரர்கள் சக்திவேல் மற்றும் அப்பாராவ் அங்கிருந்து தப்பித்து இந்தியாவின் கேம்ப் இருக்கும் பகுதி நோக்கி வரும் வழியில் சந்திக்கும் சவால்கள் மூவரும் உயிரோடு வந்து சேர்ந்தார்களா..?

களத்தில் குண்டு மழை நடுவில் வறண்ட காட்டு பகுதியில் இவர்கள் எதிர் கொண்ட பிரச்சனைகள் என்ன..? ஒரு கட்டத்தில் மேஜர் மற்றும் சக வீரரை இழந்து தனிமையில் திரும்பி வரும் சக்திவேல் கண்ணிவெடியில் கால் வைத்து மாட்டி கொள்ள ..பாகிஸ்தான் வீரர் பக்ருதீனை சந்திக்கிறார் ..இருவரின் சந்திப்பை கோபத்தில் ஆரம்பித்து உயிர் காப்பான் தோழன் என்கிற நிலைக்கு அவ்வ்வளவு நேசம் காட்டும் சூழல் superb..!
ஜனனி சித்தாரா என்ற army officer பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார் ..கதாநாயகி அர்ச்சனா சிங்க் கதையின் தேவைக்கு மட்டும் பயன் படுத்தி உள்ளார்கள் ..சர்மாஜி யாக வரும் army officer நடிப்பு அருமை..அதுபோல ஹீரோ சக்திவேல் மேஜர் உடம்பை தூக்கி கொண்டு நடக்கும் காட்சிகளை அவருடன் சேர்ந்து நாமும் அந்த சிரமத்தை உணர முடிகிறது..!

இன்னும் கொஞ்சம் படத்தில் ஏற்படும் தொய்வை எடிட் பண்ணி DI கவனித்து இருந்தால் இன்னும் பெரிய வெற்றி படமாக அமையும் என்பதில் ஐயமில்லை ..
இரு நாடுகளும் எதிரிகளை கண்டவுடன் சுட்டு கொள்ளும் மனநிலையில் மனிதம் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது என்பதை சக்திவேல் பக்ருதீன் இருவரின் கதா பாத்திரங்கள் மூலம் இயக்குனர் சொல்ல நினைத்தது அருமை ..!

இந்தியாவின் ஆர்மி அதிகாரியின் கட்டளையை நிறைவேற்ற சக்திவேல் என்ன செய்தார்…? நண்பன் பக்ருதீன் நிலை என்ன..? நாடுகளை கடந்து நட்பு மனிதம் சொல்வதென்ன …? இவற்றை அழகிய திரை காவியமாக கொடுத்த இயக்குனருக்கும் அவர் குழுவினருக்கும் பாராட்டுக்கள் ..!
நம்ம tamilprimenews ரேட்டிங் 2.7/5

