பிளாக் மெயில் திரைவிமர்சனம் RATING 3.6/5

பிளாக் மெயில்
நடிப்பு: ஜிவி பிரகாஷ், தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, லிங்கா, முத்துக்குமார், ரெட்டின் கிங்சிலி, ரமேஷ் திலக், ஹரிப்பிரியா இசை
தயாரிப்பு: ஜெயக்கொடி அமல்ராஜ் இசை: சாம் சி எஸ். ஒளிப்பதிவு: கோகுல் பினாய் இயக்கம்: மு மாறன் பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்
கதை : OPEN பண்ணா …!
தனியார் மருந்து குடோனில் இருந்து மருந்துகளை எடுத்துச்சென்று கடைகளுக்கு சப்ளை செய்யும் வேலை பார்க்கிறான் மணி (ஜிவி பிரகாஷ்) . ஒருமுறை அவன் கொண்டு சென்ற வேன் திருடு போகிறது. அதில் பல லட்சம் மதிப்புள்ள போதை மருந்து வைத்திருந்ததாகவும் அதற்கான பணத்தை நீதான் தரவேண்டும் என்று முதலாளி கோபமடைந்து மணியின் காதலியை கடத்துகிறார்..
ஜி. பி .பிரகாஷ் அந்த வேனை தன் நண்பர் ரமேஷ் திலக் உடன் தேடுகிறார்கள்.
இதற்கிடையில் ஐடி நிறுவன அதிகாரியின் (ஸ்ரீகாந்த்) குழந்தையை யாரோ கடத்தி விடுகிறார்கள். இதை அறிந்த மணி குழந்தையை தான்தான் கடத்தி வைத்திருப்பதாக கூறி அவரை பிளாக்மெயில் செய்து பணத்தை வாங்கி அந்த பணத்தை தன் முதலாளியிடம் கொடுத்து காதலியை மீட்க எண்ணுகிறான்.. ஆனால் அந்த திட்டம் தோல்வியடைகிறது.
மற்றொருபுறம் (அருண் )என்கிற லிங்கா ,பிந்து மாதவியின் முன்னாள் காதலர், இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை காட்டி இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறாய். எனக்கு இரண்டு கோடி பணம் வேண்டும் என்கிறார். பிந்து மாதவி என்னால் முடியாது என்று சொல்ல, அவரை பிளாக்மெயில் செய்கிறார் . சரி நான் குழந்தையை கடத்தி உன் கணவனிடம் பணம் வாங்கிக் கொள்கிறேன் எனகிறார்.இப்படி அருண் குழந்தையை கடத்தினாரா?
ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத மூன்று பேர், ஒரு பிளாக்மெயில் எனும் சிலந்தி வலைக்குள், மாட்டிக் கொள்கிறார்கள் ஸ்ரீகாந்த், ஜி.வி. பிரகாஷ் ,பிந்து மாதவி, மூவரும் அந்த பிளாக்மெயில் செய்தவனை, தேடுகிறார்கள் யார் அவர்?. அந்த மூவரில் ஒருவரா, அல்லது வேறொரு நபரா? எதற்காககுழந்தை கடத்தப்பட்டார்.? போன்ற பல கேள்விகளுக்குச் சில திடீர், பகீர் திருப்பங்களோடு பதில் சொல்கிறது, படம்.
காதலியை மீட்க போராடும் மணி, குழந்தையை காணாமல் தவிக்கும் ஐடி அதிகாரி , முன்னாள் காதலனிடம் சிக்கி தவிக்கும் ஐடி அதிகாரி மனைவி என முக்கோண பரிமாணத்தில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது…!மு.மாறன். இவர் இயக்கிய ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்கள், செம விறு விறுப்பை தந்திருந்தன. அதேபோல, ‘பிளாக்மெயில்’ படமும் சமூக அவலங்களை தழுவிய திகில் கலந்த திரைக்கதை கொண்டதாக அமைந்துள்ளது.
ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கிறார். சாம் சி எஸ். இசைiயில் மெலடிகள் தென்றலாக வீசுகிறது. டி இமான் இசையில் ஒத்துக்கிறியா. பாடல் ட்டம் போட வைக்கிறது கோகுல் பினாய் ஒளிப்பதிவு அருமை .மு.மாறன்.இயக்குனரின் திறமை பல இடங்களில் பளிச்சிடுகிறது. அவரின் திரைக்கதை யுக்தி, சபாஷ் போட வைக்கிறது மு .மாறன் & TEAM அனைவர்க்கும் வாழ்த்துக்கள் .
நம்ம tamilprimenews ரேட்டிங் 3.6/5