காந்தர்வகுரலில் மக்களை மயக்கும் வசீகரன் இளம் நாயகன் “அர்ஜுன்தாஸ்” நடிக்கும் BOMB திரைப்படம் செப்டம்பர் 12 வெளியாகிறது

காந்தர்வகுரலில் மக்களை மயக்கும் வசீகரன் இளம் நாயகன் “அர்ஜுன்தாஸ்” நடிக்கும் BOMB திரைப்படம் செப்டம்பர் 12 வெளியாகிறது

காந்தர்வகுரலில்  மக்களை மயக்கும் வசீகரன் இளம் நாயகன்அர்ஜுன்தாஸ்” நடிக்கும் BOMB திரைப்படம் செப்டம்பர் 12 வெளியாகிறது.

அர்ஜுன்தாஸ் எனும் நடிகன் ..

சினிமாவை பொறுத்தவரை நடிப்பை தாண்டி சில தனி தன்மை இருப்பவர்களை திரையுலகம் அரவணைத்துக்கொள்ளும் ..அது போல அர்ஜுன்தாஸ் நடிப்பை தாண்டி அவர் குரல் அவருக்கு பெரிய பிளஸ்கணீர் குரல் மக்களை யார் இவர் என திரும்பி பார்க்க வைத்தது ..!

தமிழ் சினிமாவில் முதலில் சிறு சிறு வேடங்களில் தோன்றினாலும் அந்த படங்கள் பெரும் வெற்றி படங்களாகவே அமைவது சிலருக்கு மட்டுமே ..அவர் நடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி மாஸ்டர் விக்ரம் போன்ற படங்களை சொல்லலாம் ..!வில்லன் வேடங்கள் வந்தாலும் அதில் தனக்கென முத்திரை பதித்தவர் அர்ஜுன்தாஸ் ..!

விக்னராஜன்  இயக்கத்தில் அந்தகாரம் படத்தில் அர்ஜுன்தாஸ் LEAD ரோல் செய்திருந்தார்.அந்த திரில்லர் படத்தில் ALCOHOLIC அடிக்ட் ஆக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ….இவர் நடிப்பில் குறிப்பாக அஜித்தின் good bad ugly படத்தில் அர்ஜுன்தாஸ் இரட்டை வேடத்தில் வில்லனாக ஜாமி ஜானியாக மிரட்டி இருந்தார்..இளம் நடிகர்களில் நடிப்பின் மூலம் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்வதில் அர்ஜுன்தாஸ் இயக்குனர்களின் நாயகன் என்றே சொல்லலாம் .

இவர் நாயகனாக நடித்து செப்டம்பர் 12 வெளியாகும் BOMB என்ற படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது ..!இப்படத்தை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்..இதில், அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..இப்படத்திற்கு டி. இமான் இசை..இப்படத்தை சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார்கள்..!

அர்ஜுன்தாஸ் எனும் கலைஞனுக்கு அடுத்தடுத்து வரும் படங்கள் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயம் இல்லை ..!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *