போகி திரைவிமர்சனம் ரேட்டிங் 3.2/5
 
					படம்: போகி
நடிப்பு: நபி நந்தி, சரத், லப்பர் பந்து சுவாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, மொட்டை ராஜேந்திரன், சங்கிலி முருகன், எம் எஸ் பாஸ்கர்
தயாரிப்பு: பிஜி பிச்சி மணி இசை: மரியா மனோகர் ஒளிப்பதிவு: ராஜா சி சேகர் இயக்கம்: விஜய் சேகரன் எஸ். பிஆர் ஓ: சதீஷ் (AIM)

பல ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அழகான மலை கிராமம் எந்த வசதிகளும் குறிப்பாக மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் அடிக்கடி உயிரிழப்புக்கள் சகஜமாக நடக்கும் கிராமம் சென்ட்ரல் ஸ்டேஷன் , அங்கு பெற்றோர் இல்லாத நிலையில் தங்கை சுவாசிகாவைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார் அண்ணன் நபி நந்தி…கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர் சைக்கிள் கூட செல்ல முடியாத இந்த மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் கனவாக இருக்கிறது அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாயகன் அழகர், தனது தங்கை கவிதா மூலமாக தனது கிராமத்தின் மருத்துவ தேவையை சரி செய்ய விரும்புகிறான் சில கிலோமீட்டர் மலையில் கால்நடையாக சென்று படித்துவிட்டு வீடு திரும்பி மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று சென்னை மருத்துவக் கல்லூரிக்கு செல்ல அந்த மலை கிராமமே பெரும் கனவோடு வழி அனுப்பி வைக்கிறார்கள்.மருத்துவ வசதி இல்லாத தன் கிராமத்துக்கு அதைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் பட்டணத்துக்கு சென்று மருத்துவம் பயில ஆரம்பிக்கிறார். அங்கு மருத்துவக் கல்லூரியில் திரை மறைவில் நடக்கும் பயங்கரமான ஒரு குற்றம் இவர்களது வாழக்கையை எப்படி புரட்டி போடுகிறது அதன் பின் நடப்பவை .. அவற்றின் முடிவு என்ன என்பதுதான் மீதிக் கதை..!

இடைவேளைக்கு பிறகு பசுமையான மலைகிராமத்துக்கு கதை நகரும்போது தென்றல் காற்று முகத்தில் உரசி செல்வதுபோல் ஒரு இதம் பிறக்கிறது. நபி நந்தி, சரத் இருவருக்கும் ஒரு உறவுமுறை மலர்கிறது. அது என்ன என்பது இங்கு சஸ்பென்ஸ். லப்பர் பந்து படத்தில் தினேஷின் ஜோடியாக நடித்த சுவாசிகா இதில் இளமை துள்ளளு டன் நடித்துள்ளார். பூனம் கவுர் ஒரு பாடல் காட்சிக்கு வந்து கவர்ச்சியாக ஆடிவிட்டு செல்கிறார். மார்ச்சுவரியில் வைத்து இளம் பெண்களுக்கு நேரும் கொடுமை, எங்கும் நிறைந்திருக்கும் சிசிடிவி மற்றும் செல்போன் கேமராக்களால் நேரும் ஆபத்து, பிணவறையில் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளை லோக்கல் கடைகளில் விற்கும் கொடுமை என்று நாட்டில் நாம் கேள்விப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் இந்தக் கதைக்குள் வைத்திருக்கும் இயக்குனர் பாராட்டுக்குரியவர். ரோடு வசதி இல்லாத அந்த பாவப்பட்ட மக்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் அறுபது கிலோ மீட்டர் கடந்து வர வேண்டும் அப்போது அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது., அதேபோல மருத்துவமனையில் நடக்கும் மெகா மோசடிகளை தோலுரித்துக் காட்டுகிறார். பெண்கள் எல்லா இடத்திலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதையும் மலை கிராம மக்களின் வலி, வேதனையை அழகாக சொல்லி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சேகரன் எஸ்.
இந்த படத்தில் வேறு கோணத்தில் மொட்டை ராஜேந்திரன் மிரட்டி உள்ளார் ,வேலரமமூர்த்தி காவல் துறை அதிகாரியாக வருகிறார் ,கிளைமாக்ஸ் காட்சி அருமை .
சமுதாய விழிப்புணர்வு வேண்டும் என்பதை தன் திரைக்கதை மூலம் அழகாக அழுத்தமாக சொன்ன இயக்குனர் மற்றும் பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்..! இரண்டாம் பாகம் போகி எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எகிறுது …!
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.2/5


 
			