சுதந்திர தின ஒளி விழா: ஜான் ஆப்ரஹாம் ‘டெஹ்ரான்’ பட விளம்பரம் பாந்த்ரா-வோர்லி கடல் பாலத்தில் மின்னியது !!

சுதந்திர தின சிறப்பு முன்னோட்டம் : ஜான் ஆப்ரஹாம் நடிப்பில், ‘டெஹ்ரான்’ திரைப்படம் – பாந்த்ரா -வோர்லி கடல் பாலத்தில், மாபெரும் புரஜெக்சஷனில் இடம் பிடித்துள்ளது!!
சுதந்திர தின ஒளி விழா: ஜான் ஆப்ரஹாம் ‘டெஹ்ரான்’ பட விளம்பரம் பாந்த்ரா-வோர்லி கடல் பாலத்தில் மின்னியது !!
சுதந்திர தினத்தை முன்னிட்டு, மும்பையின் புகழ்பெற்ற பாந்த்ரா-வோர்லி கடல் பாலம் (Bandra Worli Sea Link) ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவான பெரும் எதிர்பார்ப்புமிக்க திரில்லர் படமான ‘டெஹ்ரான்’ திரைப்படத்தின் மாபெரும் விளம்பர மேடையாக மாறியது. ZEE5-இல் வெளியாகும் முன்பு, பாலம் முழுவதும் ஒளிர்ந்த திரைப்படத்தின் கண்கவர் போஸ்டர், பயணிகள் மற்றும் பாதசாரிகளின் பார்வையை கவர்ந்து, அனைவரும் தங்கள் மொபைலில் அந்த தருணத்தை படம் பிடிக்க வைக்கும், உற்சாக தருணமாக மாறியது.
இந்த அபூர்வமான புரஜெக்சன், சுதந்திர தின வாரத்தின் தேசப்பற்று உணர்வையும், உளவு திரில்லர் திரைப்படத்தின் அதிரடி துடிப்பையும் ஒருங்கிணைத்தது. இரவின் இருளில் ஒளிர்ந்த கடல் பாலம், தேசப்பற்று மற்றும் சினிமா காட்சியின் கலவையாக, ஒரே நேரத்தில் கொண்டாட்டத்தையும் உற்சாக அனுபவத்தையும் அளித்தது. இந்நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்ற ஜான் ஆப்ரஹாம், இதை “பெருமையும் மறக்க முடியாத தருணமும்” என்று விவரித்து, டெஹ்ரான்-படத்தில் பங்கேற்றது ஒரு அற்புதமான பயணமாக இருந்தது என்றார்.
இப்போது ZEE5-இல் ஸ்ட்ரீம் ஆகும் டெஹ்ரான், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான உலகளாவிய பதற்றத்தை மையமாகக் கொண்ட, இந்தியா அந்த மோதலில் சிக்கிக்கொள்வதைப் பதிவு செய்யும் ஒரு திகில் நிறைந்த பொலிட்டிக்கல் திரில்லர் படமாகும். மாடோக் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் கோபாலன் இயக்கியுள்ள இப்படத்தில், மனுஷி சில்லர், நீரு பஜ்வா, மதுரிமா துலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விசுவாசம், பொறுமை, அதிரடி, மர்மம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் டெஹ்ரான், சுதந்திர தினத்திற்கு ஏற்ற, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் ஒரு அட்டகாசமான படம்.
படம் குறித்து நடிகர் ஜான் ஆப்ரஹாம் கூறியதாவது…,
“டெஹ்ரான் திரைப்படத்தில் பங்கேற்றது ஒரு அபாரமான அனுபவம். நான் கடந்த ஆண்டுகளில் நடித்த திரைப்படங்களைக் கவனித்தால், நாட்டின் மீது எனக்கு இருக்கும் பற்று தெளிவாக தெரியும் — அது திரையில் நான் செய்வதில் பெரும்பாலும் பிரதிபலிக்கும். ஜியோ பாலிட்டிக்ஸ் மீது உள்ள ஆர்வம், இந்தக் கதையின் மீது எனக்கு உடனடியாக ஈர்ப்பை ஏற்படுத்தியது. சுஷ்மா ஸ்வராஜ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபாரின் சர்வீஸ் நிபுணர்களுடன் கலந்துரையாடிய அனுபவம், ஒரே நேரத்தில் ஊக்கமூட்டுவதும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது. டெஹ்ரான் போஸ்டர் பாந்த்ரா-வோர்லி கடல் பாலத்தில் ஒளிர்வதை காண்பது பெருமையும் மறக்க முடியாத தருணமுமாகும். இப்படத்திற்கு ZEE5 இவ்வளவு வலுவான தளத்தை வழங்கியதில் மகிழ்ச்சி. சுதந்திர தின வார இறுதியில் இப்படம் வெளியாகுவது, தேசப்பற்று உணர்வுடன் கூடிய, ஒரு அதிரடி கதைக்குள் பார்வையாளர்களை அழைக்கும் சிறந்த தருணம்.”
இந்த சுதந்திர தினத்திற்கு சிறந்த பார்வை அனுபவமாக டெஹ்ரான் தற்போது ZEE5-இல் ஸ்ட்ரீமாகி வருகிறது.