ட்ராமா (TRAUMA) திரை விமர்சனம்

ட்ராமா (TRAUMA) திரை விமர்சனம்

ட்ராமா (TRAUMA)

நடிப்பு: விவேக் பிரசன்னா, சாந்தினி, சஞ்சீவ், ஆனந்த நாக், பூர்ணிமா ரவி, பிரதோஷ், மாரிமுத்து, ரமா, ஈஸ்வர், நிழல்கள், ரவி, வையாபுரி

தயாரிப்பு: எஸ் உமா மகேஸ்வரி  இசை: ஆர் எஸ் ராஜ் பிரதாப்   ஒளிப்பதிவு: அஜித் ஸ்ரீனிவாசன்  இயக்கம்: தம்பிதுரை மாரியப்பன்

பிஆர்ஓ: நிகில் முருகன்

கதை .. open பண்ணா

பிரசன்னாவும் சாந்தினியும் தம்பதிகள். இவர்களுக்கு வெகு நாட்களாக குழந்தை பிறக்கவில்லை. குழந்தையின்மைக்கு தன்னுடைய குறைபாடுதான் காரணம் என்று கணவன் பிரச்ன்னா தெரிந்து கொள்கிறார். இந்நிலையில் மனைவி சாந்தினி கர்ப்பமாகிவிடுகிறார். தனது கணவர மூலமாக தான் கர்ப்பமடைந்ததாக நினைத்திக்கொண்டிருக்கும் சாந்தினிக்கு, ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. சாந்தினியின் ஆபாச வீடியோ ஒன்றை ரவுடி எடுத்து வைத்துக் கொண்டு 50 லட்சம் கேட்டு மிரட்டுகிறான். 

மற்றோரு கதையாக ஆட்டோ ஓட்டும் மாரிமுத்து மகள் ஒருவனை காதலிக்கிறார். அவன் அவளை கர்ப்பமாகி விட்டு மாயமாகி விடுகிறான். மகள் நிலையை அறிந்து மாரிமுத்து குடும்பம் மனம் உடைந்து  போகிறது.  பாதிக்கப்பட்ட இந்த இரு பெண்களின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?அந்த பணத்தை கொண்டு வரும்போது எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. அது விவேக் பிரசன்னா உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அப்படி என்ன நடந்தது. இதற்கு பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்விகளுக்கு” ட்ராமா” படம் பதில் அளிக்கிறது. 

தனது எதார்த்தமான நடிப்பு மூலம் உணர்வுகளை கொட்டி தீர்க்கிறார் பிரசன்னா… சாந்தினி ஆதங்கத்தை அமைதியான நடிப்பின் மூலம் வெளிபடுத்தி பாராட்டைப் பெறுகிறார். குழந்தை இல்லாத கவலை, கர்ப்பமடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதம்,  பிறகு அதே கர்ப்பத்தால் உருவெடுக்கும் பிரச்சனை என பல இடங்களில் அழுத்தமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்….பிரதோஷ், அவரது காதலியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி இருவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது கதாபாத்திரத்திற்கு தக்கவாறு  நடித்திருக்கிறார்கள்.

விவேக் பிரசன்னாவின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக் நடிப்பு ஓகே . தம்பிதுரை மாரியப்பன், மருத்துவ பின்னணியில் நடக்கும் குற்ற செயல்களை மையமாக வைத்து எழுதியிருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருப்பதோடு, அதை சொல்லிய விதம் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் இருக்கிறது. மூன்று கதைகள் மூலம் தான் சொல்ல வந்த விசயத்தை வித்தியாசமாக சொல்லியிருக்கும் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் பாராட்டுக்கள் , 

நம்ம tamilprimenews.com rating 2.9/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *